பட்டுலாஸ் சாலைக்கு செல்ல அண்ணாசாலையில் மோட்டார் சைக்கிளுக்கு தனி பாதை

அண்ணா சாலையில் இருந்து பட்டுலாஸ் சாலை வழியாக செல்லும் மோட்டார்சைக்கிள்களுக்கு தனி வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
பட்டுலாஸ் சாலைக்கு செல்ல அண்ணாசாலையில் மோட்டார் சைக்கிளுக்கு தனி பாதை
Published on

சென்னை:

சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாஷா எதிரே பட்டுலால் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை போக்குவரத்து நெருக்கடி காரணமாக பல வருடங்களுக்கு முன்பு ஒரு வழிப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த சாலை வழியாக ராயப்பேட்டை, சத்தியம் தியேட்டர், எக்ஸ்பிரஸ் அவென்யூ மற்றும் பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் எளிதில் செல்ல முடியும்.

பல்வேறு கம்பெனிகளின் அலுவலகங்கள் இந்த சாலையில் அமைந்துள்ளன. தினமும் மோட்டார் சைக்கிளில் ஏராளமானோர் அலுவலகம் சென்று வருகிறார்கள்.

பட்டுலாஸ் சாலையில் இருந்து ஜாம்பஜார் செல்வதற்கு கூடுதலாக 2 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலையில் மோட்டார்சைக்கிள் ஓட்டுபவர்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி போக்குவரத்து காவல் துறையினர் இதுகுறித்து ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் மோட் டார்சைக்கிள்கள் மட்டும் செல்வதற்காக பட்டுலாஸ் சாலையில் இருந்து இடது புறமாக ஜாம்பஜார் பகுதிக்கு தனி வழிப்பாதை அமைத்துள்ளனர். ‘எக்ஸ்பிரஸ் அவென்யூ மால்’ பகுதி வழியாக இனிமேல் மோட்டார்சைக்கிள்களில் எளிதில் செல்லலாம். இதற்காக அந்த பகுதியில் ‘பேரி கார்டுகள்’ அமைத்து தனி வழிப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சரவணன் கூறும்போது, “பட்டுலாஸ் சாலையில் இருந்து ஜாம்பஜாருக்கு செல்ல மோட்டார் சைக்கிள்களுக்கு தனி வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். கடந்த பல வருடங்களாக 2 கிலோ மீட்டர் தூரம் கூடுதலாக சுற்றி வந்தோம். தற்போது தனி வழிப்பாதை மூலம் மிகவும் எளிதில் செல்ல முடிகிறது என்றார்.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மோட்டார்சைக்கிள் வாகன ஓட்டிகளுக்காக முதற் கட்டமாக சோதனை ஓட்ட முயற்சியாக பட்டுலாஸ் சாலையில் இருந்து ஜாம்பஜாருக்கு தனி வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் வாகன ஓட்டிகள் எளிதில் சென்று வரமுடியும். அலுவலகங்கள் சென்று வருவோருக்கு இது பெரிதும் பயன்மிக்கதாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com