

டக்கார்:
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஜனாதிபதி மேக்கி சால் தலைமையிலான குடியரசு கூட்டணிக்கும், முன்னாள் ஜனாதிபதி அப்டொயலே வடே தலையிலான செனகல் ஜனநாயக கட்சிக்கும் இடையே நேரடி போட்டி இருந்தது.
இந்த தேர்தலில பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அரசு தொலைக்காட்சி மூலம் அதிகாரப்பூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் உள்ள 165 தொகுதிகளில் ஆளுங்கட்சி தலைமையிலான கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த கூட்டணி கிட்டத்தட்ட 50 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
ஜனநாயக கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள டக்கார் மேயர் கலிபா சால் தலைமையிலான கூட்டணி 7 இடங்களைப் பிடித்துள்ளது.
2012ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் மேக்கி சாலை எதிர்த்து போட்டியிட்ட அப்டொயலே வடே தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.