

சென்னை:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் இந்தாண்டு செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்விகள் மாணவர்கள் மத்தியில் எழுந்தன.
இந்நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதன் எதிரொலியாக, அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் கல்லூரி பருவத்தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளுக்கும், இந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய பருவத்தேர்வுகள் கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் தொடங்கும் போது கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும். முதலில் தேர்வுகளை நடத்திவிட்டு அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடங்கள் தொடங்கும் என தெரிவித்துள்ளது.