அமித் ஷாவின் பாதுகாப்பு தொடர்பான செலவுகளை தெரிவிக்க முடியாது - மத்திய தகவல் ஆணையம்

பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் பாதுகாப்பு தொடர்பான செலவுகளை தெரிவிக்க முடியாது என மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. #AmitShah #CIC
அமித் ஷாவின் பாதுகாப்பு தொடர்பான செலவுகளை தெரிவிக்க முடியாது - மத்திய தகவல் ஆணையம்
Published on

புதுடெல்லி:

பாஜக தேசிய தலைவராக அமித் ஷா பதவி வகித்து வருகிறார். இவருக்கு விஐபிக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, தீபக் ஜுனேஜா என்பவர் பாஜக தலைவர் அமித் ஷாவின் பாதுகாப்புக்காக மத்திய அரசு செலவழித்து வரும் தகவல்கள் கேட்டு மத்திய தகவல் ஆணையத்திடம் விண்ணப்பித்தார்.

அதில், ராஜ்ய சபாவில் உறுப்பினராக இல்லாத ஒருவருக்கு மத்திய அரசின் செலவில் பாதுகாப்பு அளிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.  மேலும், யார் யாருக்கெல்லாம் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்ற பட்டியலையும் கோரியிருந்தார்.

இந்த விண்ணப்பம் தொடர்பாக பதிலளித்த மத்திய தகவல் ஆணையம், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் பாதுகாப்பு செலவினங்கள் குறித்த தகவலை பாதுகாப்பு கருதி தெரிவிக்க முடியாது என தெரிவித்துள்ளது. #AmitShah #CIC

X

Maalai Malar
www.maalaimalar.com