ரஷியா மேலும் பல தடுப்பூசிகளை உருவாக்க யோசனை

கொரோனா பிரச்சினையை சமாளிக்க ரஷியா மேலும் பல தடுப்பூசிகளை உருவாக்குவது அவசியம் என்று அந்நாட்டு பொது சுகாதார கண்காணிப்பகத்தின் தலைவர் யோசனை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரிசோதனை
கொரோனா வைரஸ் பரிசோதனை
Published on

மாஸ்கோ:

உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுத்து நிறுத்தும் வகையில், ஸ்புட்னிக்-5 என்ற பெயரில் உலகின் முதலாவது தடுப்பூசியை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக ரஷியா அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், அந்நாட்டை சேர்ந்த பொது சுகாதார கண்காணிப்பகத்தின் தலைவர் அன்ன போபோவா, கொரோனா பிரச்சினையை சமாளிக்க ரஷியா மேலும் பல தடுப்பூசிகளை உருவாக்குவது அவசியம் என்று யோசனை தெரிவித்துள்ளார். தடுப்பூசி உருவாக்கும் பணியில் ரஷிய மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com