ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்கவுள்ளது.
மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம்
மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம்
Published on

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கைதாகி 100 நாட்களுக்கு மேல் ஆகிறது.

அவரது வழக்கறிஞர்கள் சி.பி.ஐ. நீதிமன்றத்திலும், டெல்லி ஐகோர்ட்டிலும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com