மேற்கு வங்க தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து பா.ஜ.க. புதிய மனு- நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

மேற்குவங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கால நீட்டிப்பை ரத்து செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பா.ஜ.க. தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. #WestBengal #PanchayatPolls
மேற்கு வங்க தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து பா.ஜ.க. புதிய மனு- நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
Published on

புதுடெல்லி:

மேற்குவங்கத்தில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு வரும் மே மாதம் 1,3,5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் திரிணாமுல் கட்சியினர் எதிர்க்கட்சிகளை வேட்பு மனு தாக்கல் செய்ய விடுவதில்லை எனவும், வேட்புமனுக்களை அதிகாரிகள் வழங்குவது இல்லை எனவும் புகார் எழுந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் நேற்றுடன் முடிந்த நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகள் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதனையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஒருநாள் நீட்டித்து (இன்று மாலை 3 மணி வரை) தேர்தல் ஆணையம் நேற்றிரவு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இன்று காலை திடீரென அந்த உத்தரவை ரத்து செய்து விட்டது.

இதனையடுத்து, கொல்கத்தா பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், மேற்கு வங்காள தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக மாநில பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு இடைக்கால தடைவிதித்து, விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.

இது ஒருபுறமிருக்க, தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் பா.ஜ.க. மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது. #WestBengal #PanchayatPolls #BengalPanchayatPoll2018

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com