மாட்டிறைச்சி தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு வருகிற 15-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
மாட்டிறைச்சி தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
Published on

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் மே 26, 1960-ம் ஆண்டு மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து புதிய உத்தரவை பிறப்பித்தது.

பசு, காளை, எருது, ஒட்டகம் ஆகிய விலங்குகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய கூடாது என்பதே அந்த உத்தரவாகும்.

மாட்டிறைச்சி தடைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்கட்சிகள் அனைத்தும், பல்வேறு அமைப்புகளும் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தன. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் இதை அமல்படுத்தமாட்டோம் என்று தெரிவித்தன. நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஐதராபாத்தை சேர்ந்த அமைப்பு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடர்ந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com