புத்தாண்டு பரிசாக கடன்களுக்கான அடிப்படை வட்டியை குறைத்து எஸ்.பி.ஐ அறிவிப்பு

வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசாக கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதம் மற்றும் முதன்மை கடன் விகித்தை குறைத்து பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) நடவடிக்கை எடுத்துள்ளது. #SBI
புத்தாண்டு பரிசாக கடன்களுக்கான அடிப்படை வட்டியை குறைத்து எஸ்.பி.ஐ அறிவிப்பு
Published on

புதுடெல்லி:

முதன்மை பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடன் வட்டி மற்றும் முதன்மை கடன் விகிதங்கள் குறைத்து வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, தற்போது 8.95 சதவிகிதமாக உள்ள அடிப்படை கடன் வட்டி 8.65 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், நிரந்தர முதன்மை கடன் விகிதம் 13.70-ல் இருந்து 13.40 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கை மூலம் சுமார் 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.#SBI

X

Maalai Malar
www.maalaimalar.com