தென்ஆப்பிரிக்காவுக்கு 144 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ்

தொடக்க வீரர் எவின் லீவிஸ் 35 பந்தில் 56 ரன்கள் விளாசிய போதிலும், வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவரில் 143 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
எவின் லீவிஸ்
எவின் லீவிஸ்
Published on

டி20 உலகக்கோப்பையில் ‘சூப்பர் 12’ சுற்றில் இன்றைய முதல் ஆட்டத்தில் குரூப் 1-ல் இடம் பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. லென்டில் சிம்மன்ஸ்- எவின் லீவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிம்மன்ஸ் நிதானமாக விளையாட எவின் லீவிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

லீவிஸ் 35 பந்தில் 56 ரன்கள் விளாசினார். அவர் ஆட்டமிழக்கும்போது வெஸ்ட் இண்டீஸ் 10.3 ஓவரில் 73 ரன்கள் குவித்திருந்தது. இதனால் 20 ஓவரில் 150 ரன்னை எளிதாக தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சிம்மன்ஸ் 35 பந்தில் 16 ரன்களும், பூரன் 7 பந்தில் 12 ரன்களும், கிறிஸ் கெய்ல் 12 பந்தில் 12 ரன்களும், பொல்லார்டு 20 பந்தில் 26 ரன்களும், அந்த்ரே ரஸல் 4 பந்தில் 5 ரன்களும் அடித்து ஏமாற்றம் அளித்தனர்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 143  ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com