பாகிஸ்தானுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி: தொடரை 3-2 எனக்கைப்பற்றியது
தொடக்க வீரர் பகர் சமான் 70 ரன்னும், இமாத் ஹசிம் 47 ரன்னும் எடுத்தனர். பிரிடோரியஸ், பெலுக்வாயோ தலா 2 விக்கெட்டும், ஸ்டெயின், ரபாடா, முல்டர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 40 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர் குயின்டன் டி காக் 58 பந்தில் 83 ரன்னும் (11 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் டு பிளிசிஸ், வான்டர் டஸ்சன் ஆகியோர் ஆட்டமிழக்காமல் தலா 50 ரன்கள எடுத்தனர். முகமது அமீர், உஸ்மான் ஷின்வாரி, ஷஹீன் ஷா அப்ரிடி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
டு பிளிசிஸ்
இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்கா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த அணி ஏற்கனவே 2-வது, 3-வது போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. பாகிஸ்தான் முதல் மற்றும் 4-வது போட்டியில் வெற்றி பெற்று இருந்தது.

