

417 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்தது. 4-ம் நாள் ஆட்டத்தின்போது தென்ஆப்பிரிக்கா ஒருகட்டத்தில் 136 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது திணறியது. 6-வது விக்கெட்டுக்கு மார்கிராம் உடன் விக்கெட் கீப்பர் குயிண்டான் டி காக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதனால் ஒரு கட்டத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுவிடுமோ என்ற நிலை உருவானது. இதனால் ஆஸ்திரேலியா வீரர்கள் விரக்தியடைந்தனர். குறிப்பாக வார்னர் அதிக அளவில் அப்செட் ஆனார். மதிய உணவு இடைவேளை - தேனீர் இடைவேளைக்கு இடையிலான 2-வது செசனில் தென்ஆப்பிரிக்கா ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 107 ரன்கள் எடுத்தது. மார்கிராம் 85 ரன்னுடனும், டி காக் 21 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
தேனீர் இடைவேளை 20 நிமிடம் என்பதால் வீரர்கள் டிரஸ்ஸிங் அறைக்கு சென்றனர். அப்போது அறைக்குச் செல்லும் வழியில் டி காக் நோக்கி வார்னர் வார்த்தைகைள அள்ளி வீசினார். அவரை ஸ்மித் உள்பட ஆஸ்திரேலிய வீரர்கள் சமாதானம் படுத்தினார்கள். இருந்தாலும் வார்னர் விட்டபாடில்லை. இறுதியில் ஒரு வழியாக சக வீரர்கள் அவரை தள்ளி கொண்டு சென்றனர்.