239 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்காவிற்கு 101 ரன்கள் இலக்கு

போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 101 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. #SAvAUS
239 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்காவிற்கு 101 ரன்கள் இலக்கு
Published on

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா டி வில்லியர்சின் அபார சதம் (126 அவுட் இல்லை), டீன் எல்கர் (57), அம்லா (56) அரைசதங்களால் 382 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் கம்மின்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 139 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. வார்னர் 13 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். பான்கிராப்ட் 24 ரன்கள் எடுத்த நிலையில் நிகிடி பந்தில் க்ளீன் போல்டானார். நட்சத்தி வீரர் ஸ்மித் 11 ரன்னிலும், ஷேன் மார்ஷ் 1 ரன்னிலும் வெளியேற, ஆஸ்திரேலியா 86 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 3-வது வீரராக களம் இறங்கிய கவாஜா ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 75 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

6-வது விக்கெட்டுக்கு மிட்செல் மார்ஷ் உடன் விக்கெட் கீப்பர் பெய்ன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. மார்ஷ் 39 ரன்னுடனும், பெய்ன் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பெய்ன் தாக்குப்பிடித்து விளையாட மிட்செல் மார்ஷ் 45 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அதன்பின் வந்த கம்மின்ஸை 5 ரன்னில் வெற்றியேற்றினார். இதன்மூலம் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். முதல் இன்னிங்சிலும் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றியிருந்தார்.

அடுத்து வந்த ஸ்டார்க் 1 ரன்னிலும், நாதன் லயன் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா 211 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுக்களை இழந்தது. கடைசி விக்கெட்டாக களமிறங்கிய ஹசில்வுட் 17 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா 239 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பெய்ன் 28 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 6 விக்கெட்டும், மகாராஜ், நிகிடி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com