ரஜினி கட்சி தொடங்குவது குறித்து தமிழ்ப்புத்தாண்டில் அறிவிப்பார்- சத்யநாராயண ராவ்

ரஜினி கட்சி தொடங்குவது குறித்து தமிழ்ப்புத்தாண்டில் தெரிவிப்பார் என்றும் கட்சி, கூட்டணி உள்ளிட்ட கட்சி தொடர்பான அனைத்து தகவல்களையும் அவரே அறிவிப்பார் என்றும் சத்யநாராயண ராவ் கூறியுள்ளார்.
சத்யநாராயண ராவ்
சத்யநாராயண ராவ்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி திருமணத்தில் பங்கேற்ற ரஜினியின் சசோதரர் சத்ய நாராயணராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ரஜினி கட்சி தொடங்குவது குறித்து தமிழ்ப்புத்தாண்டில் தெரிவிப்பார். கட்சி, கூட்டணி உள்ளிட்ட கட்சி தொடர்பான அனைத்து தகவல்களையும் அவரே அறிவிப்பார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்கள் மாற்றப்பட்டுள்ளார்கள். மக்களிடம் சகோதரத்துவம் இல்லாதநிலை உருவாகி உள்ளது. சி.ஏ.ஏ. சட்டம் குறித்து பிரதமர் மோடி சிறப்பாக செய்து வருகிறார். சில நாட்களில் அனைத்து பிரச்சனைகளும் சரியாகி விடும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன்.

டெல்லியில் ஏற்பட்ட கலவரம் எதிர்கட்சிகள் அல்லது யாருடைய தூண்டுதல் பேரிலோ ஏற்பாடு செய்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்த நிலையில் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது நல்லதல்ல. இதுமிகவும் தவறு.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com