சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர்கள் 2 பேருக்கு கொரோனா

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் கைதான காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

மதுரை:

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் உட்பட் 10 பேரை கைது செய்தனர். இதையடுத்து இவ்வழக்கு சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் ஜெயராஜ் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் செல்போன் கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், டெல்லியில் இருந்து வந்த 8 சிபிஐ அதிகாரிகளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் சிபிஐ அதிகாரிகளுக்கு உதவி செய்த மதுரை சிபிஐ அதிகாரிக்கும் கொரோனா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com