

மதுரை:
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், காவலர்கள் பால்துரை, முத்துராஜ் மற்றும் முருகன் ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. 3 பேரும் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், எஸ்.எஸ்.ஐ பால்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காவலர் முத்துராஜ் பூரண குணமடைந்ததை தொடர்ந்து மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.