

சிவகாசி அருகே ரிசர்வ்லைனில் பிரசித்தி பெற்ற சந்தனமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவி லில் ஆண்டுதோறும் பால் குட திருவிழா கொண் டாடப்படுவது வழக்கம்.
இந்த கோவில் 9-ம் ஆண்டு பால்குட திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரம், தீபா ராதனைகள் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட ஊர்வலம் நடைபெற்றது. காளியம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம் தொடங்கியது.
காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த் திக்கடன் செலுத்தினர். இந்திராநகர், தேவர் சிலை, முத்துராமலிங்கம் நகர், நேருஜி நகர், உட்பட பல்வேறு பகுதி வழியாக சந்தனமாரியம்மன் கோவில் வந்தடைந்தது. பால்குடம் எடுத்து வந்தவர்களுக்கு ஒவ்வொரு பகுதிகளிலும் பக்தர்கள் மாலை அணி வித்து வரவேற்றனர். தொடர்ந்து சந்தன மாரியம் மனுக்கு பாலாபி ஷேகம் நடைபெற்றது.
சந்தனமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பால்குடம் ஊர்வலத்தில் இந்திராநகர், நேருஜி நகர், சிலோன் காலனி ரிசர்வ்லைன், முத்துராமலிங்கபுரம் காலனி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். இன்று (திங்கள்கிழமை) பொங்கல் திருவிழாவும், திருவிளக்கு பூஜையும் நடை பெறுகிறது.