ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் இருந்து சானிட்டரி நாப்கின்களுக்கு விலக்கு

பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய நிதி மந்திரி இன்று தெரிவித்துள்ளார். #GST #SanitaryNapkinsExempted
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் இருந்து சானிட்டரி நாப்கின்களுக்கு விலக்கு
Published on

புதுடெல்லி:

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குழுவின் 28-வது கூட்டம் டெல்லியில் மத்திய (இடைக்கால) நிதி மந்திரி பியுஷ் கோயல் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பியுஷ் கோயல், ‘பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு  ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்க இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார். #GST #SanitaryNapkinsExempted

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com