பிக் பாஷ் டி20 லீக்: நேபாளம் சுழற்பந்து வீச்சாளரை ஒப்பந்தம் செய்தது மெல்போர்ன் ஸ்டார்ஸ்

நேபாளம் சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லாமிச்சானே-ஐ மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளது பிக் பாஷ் டி20 லீக் அணி மெல்போர்ன் ஸ்டார்ஸ்.
சந்தீப் லாமிச்சானே
சந்தீப் லாமிச்சானே
Published on

நேபாளம் நாட்டைச் சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளர் சந்தீப்  லாமிச்சானே. 19 வயதான இவர் கடந்த பிக் பாஷ் டி20 லீக்கில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினார். 8 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஓவருக்கு தலா 6.57 ரன்களே விட்டுக்கொடுத்துள்ளார்.

சிறப்பாக பந்து வீசிய சந்தீப் லாமிச்சானே 8 போட்டிகளிலேயே விளையாடினார். அதன்பின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கெதிரான தொடரில் விளையாடுவதற்காக சென்றுவிட்டார். அதேபோல் வங்காளதேச பிரிமீயர் லீக்கில் விளையாடுவதற்கும் சென்றுவிட்டார்.

தற்போது முழுத்தொடரிலும் விளையாடும் வகையில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி சந்தீப்பை ஒப்பந்தம் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com