

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே ஓலப்பாளையம் கருப்பண்ணார் கோவில் அருகே மணல் கடத்தல் நடப்பதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அந்த கோவில் அருகே அனுமதியின்றி கொட்டி குவித்து வைக்கப்பட்டு இருந்த மணலை பொக்லைன் எந்திரம் மூலம் அள்ளி லாரியில் கடத்த முயன்றதை பார்த்தனர்.
உடனே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மணல் கடத்தல் தொடர்பாக பொக்லைன் எந்திர உரிமையாளரான குப்புச்சிபாளையத்தை சேர்ந்த ராஜா (43), லாரி டிரைவரான தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை ேசர்ந்த கிருஷ்ணமூர்த்தி (26) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான லாரி உரிமையாளர் பென்னாகரத்தை சேர்ந்த அருள், பொக்லைன் எந்திர உரிமையாளரின் தம்பி இளங்கோ ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.