ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்த சுதர்சன் பட்நாயக்

மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், அமெரிக்க அதிபர், துணை அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன், கமலா ஹாரிஸ் மணல் சிற்பம்
ஜோ பைடன், கமலா ஹாரிஸ் மணல் சிற்பம்
Published on

புவனேஷ்வர்:

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

இதற்கிடையே, சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் வெற்றி பெற்று விரைவில் பதவியேற்க உள்ளனர்.

இந்நிலையில்,மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு மணல் சிற்பம் வரைந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்வு செய்யப்பட்டுள்ளதை குறிக்கும் வகையில், ஒடிசா கடற்கரையில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசின் மணல் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் வரைந்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com