சாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ்: வெளியீட்டு தேதி அறிவிப்பு

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ்: வெளியீட்டு தேதி அறிவிப்பு
Published on

புதுடெல்லி:

சாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் அறிமுக விழாவிற்கான அழைப்பிதழ்களை சாம்சங் அனுப்பி வருகிறது. அதன்படி நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவின் அன்பேக்டு நிகழ்வில் புதிய கேலக்ஸி எஸ்9 சீரிஸ் அறிமுகம் செய்யப்படுகிறது. 

ஏற்கனவே வெளியான தகவல்களில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்பரவரி 25-ம் தேதி வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், சாம்சங் இதே தேதியில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதை உறுதி செய்திருக்கிறது. முன்னதாக ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சாம்சங் வெளியிட்டுள்ள டீசரில் மேம்படுத்தப்பட்ட கேமரா வழங்கப்பட இருப்பதை தெரிவித்திருக்கிறது. பெரும்பாலான எஸ் 9 சீரிஸ் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்திருக்கும் நிலையில், புதிய ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் மற்றும் 6.2 இன்ச் வளைந்த எட்ஜ் கொண்ட சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேக்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் புதிய ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்ற ஆசிய சந்தைகளில் எக்சைனோஸ் 9 சீரிஸ் 9810 சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், கேலக்ஸி எக்ஸ்பீரியன்ஸ் யூசர் இன்டர்ஃபேஸ் சார்ந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான ரீடெயில் பெட்டியில் கேமரா சார்ந்த அம்சங்கள்: சூப்ப ர்-ஸ்பீடு டூயல்-பிக்சல் 12 எம்பி பிரைமரி கேமரா, OIS, F1.5/2.4 அப்ரேச்சர், IP68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், AKG தயாரித்த இயர்போன்கள் மற்றும் 3000 எம்ஏஹெச் மற்றும் 3500 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் புதிய ஸ்மார்ட்போன்களுடன் டிரேட்மார்க் செய்யப்பட்ட டெக்ஸ்பேட் (DeXPad) வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. பார்சிலோனாவில் சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2018 நிகழ்ச்சி பிப்ரவரி 25-ம் தேதி மாலை 6.00 மணி (இந்திய நேரம் இரவு 10.30 மணி) துவங்குகிறது. 

சாம்சங் வழக்கப்படி மற்ற சாம்சங் நிகழ்வுகளை போன்று 2018 அன்பேக்டு நிகழ்ச்சியும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் யூடியூபில் நேரலையில் ஸ்டிரீம் செய்யப்பட இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com