மெல்லிய பெசல்களுடன் தயாராகும் சாம்சங் கேலக்ஸி S9

சாம்சங் கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மெல்லிய பெசல்களுடன் தயாராகும் சாம்சங் கேலக்ஸி S9
Published on

சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி S8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் பெசல்-லெஸ் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டது. இவற்றை தொடர்ந்து வெளியான பல்வேறு இதர ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களிலும் இதே போன்ற டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன்களில் மெல்லிய பெசல்கள் சிறப்பான ஸ்கிரீன் அனுபவத்தை வழங்குகின்றன.

சாம்சங் நிறுவனத்தின் 2018 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான கேலக்ஸி S9 சீரிஸ் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

விரைவில் அறிமுகமாக இருக்கும் கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் சாம்சங் முந்தைய ஸ்மார்ட்போன்களை விட மெல்லிய பெசல்களை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகியுள்ள தகவல்களில் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போனில் 90 சதவிகிதம் ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ வழங்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


சாம் மொபைல் தளத்தில் இருந்து வெளியாகியுள்ள தகவல்களில் சாம்சங் நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டுள்ள ஸ்மார்ட்போன்களை விட புதிய ஸ்மார்ட்போன்களில் மெல்லிய பெசல்களை வழங்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போனின் அடிப்பகுதியில் பெசல்கள் நீக்கப்படலாம் என்றும் மேல்பக்க பெசல்கள் கேலக்ஸி S8-ஐ விட சிறியதாக இருக்கும்.

முன்பக்கம் செல்ஃபி கேமரா, செனசார்கள் மற்றும் இயர்போன் ஜாக் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்பதால் சிறிதளவு பெசல்கள் வைக்கப்பட வேண்டும். எனினும் முந்தைய கேலக்ஸி S8 சீரிஸ் ஸ்மார்ட்போனினை விட 6 சதவிகிதம் வரை மெல்லிய பெசல்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது சாதனத்தில் பெரிய திரை மற்றும் எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளேக்களை வழங்கி வருவதை தொடர்ந்து சாம்சங் கேலக்ஸி S9 சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் 90 சதவிகித ஸ்கிரீன்-டூ-பாடி கொண்டிருப்பதால் பார்க்க ஐபோன் X போன்று காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஸ்மார்ட்போன்களில் பெசல்-லெஸ் டிரென்ட் 2018-ம் ஆண்டிலும் தொடரும் என்றும் பல்வேறு நிறுவனங்களும் பெசல்களை முழுமையாக குறைக்கும் என்றும் கூறப்படுகிறது. கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com