டூயல் டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் ப்ளி்ப் போன் வெளியிடப்பட்டது: விலை மற்றும் சிறப்பம்சங்கள்

சாம்சங் நிறுவனத்தின் W2017 ப்ளிப் போனின் மேம்படுத்தப்பட்ட மாடலை வெளியிட்டுள்ளது. சாம்சங் SM-G9298 என அழைக்கப்படும் புதிய ப்ளிப் போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டூயல் டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் ப்ளி்ப் போன் வெளியிடப்பட்டது: விலை மற்றும் சிறப்பம்சங்கள்
Published on

பீஜிங்:

சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட W2017  ப்ளிப் போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் SM-G9298 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் முந்தைய மாடலை விட அதிக சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் கேமரா வழங்கப்பட்டுள்ளது.  

டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள சாம்சங் SM-G9298 ஸ்மார்ட்போனில் 4.2 இன்ச் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 2.15 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராசஸர் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

புகைப்படங்களை எடுக்க சாம்சங் SM-G9298 மாடலில் 12-எம்பி பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா, f/1.9 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.  

4ஜி கனெக்டிவிட்டி, மைக்ரோ யுஎஸ்பி, ப்ளூடூத், வைபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட ஆப்ஷன்களும் 2300 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் புதிய ப்ளிப் போனில் சாம்சங் பே, எஸ் வாய்ஸ் மற்றும் செக்யூர் ஃபோல்டர் ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது.

இத்துடன் புதிய சாம்சங் SM-G9298 மாடலில் அக்செல்லோமீட்டர், பாரோமீட்டர், கைரேகை ஸ்கேனர் மற்றும் கைரோஸ்கோப் உள்ளிட்ட சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com