

சென்னை:
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கடும் வறட்சி நிலவுவதால் காய்கறி விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்துதான் அதிக அளவில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. அங்கு ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக காய்கறி வருவதும் குறைந்து விட்டது.
இதனால் ஒவ்வொரு காய்கறிகளின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்து வருகிறது. அயனாவரம் மார்க்கெட்டில் இன்று சாம்பார் வெங்காயம் 1 கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தமாக வாங்கினால் கிலோ ரூ.90-க்கு தருகிறார்கள். பெரிய வெங்காயம் 1 கிலோ 10 ரூபாயில் இருந்து 15 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. தக்காளி விலையும் 10 ரூபாயில் இருந்து 15 ரூபாயாக உயர்ந்து விட்டது.
இதேபோல் ஒவ்வொரு காய்கறிகளும் விலை உயர்ந்துள்ளது. அதன் விவரம் கிலோவுக்கு வருமாறு:-
தற்போது அனல்காற்று அதிகம் வீசுவதால் காய்கறி விளைச்சல் குறைந்து விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.