

சென்னை:
கோயம்பேடு பூ மார்க்கெட்டில் தினமும் பலவகை பூக்கள் வந்து குவிகிறது. புத்தாண்டு தினத்தையொட்டி நேற்று பூ விலை அதிகமாக இருந்தது.
இன்று பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்தது. ஜாதி மல்லி கிலோ ரூ. 200, மல்லி ரூ. 300, சம்பங்கி கிலோ ரூ. 100, ரோஸ் கிலோ ரூ. 100-க்கும் விற்பனையானது.
சாமந்தி பூ விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. சுமார் 100 டன் சாமந்தி பூ இன்று மட்டும் வந்து குவிந்தது. கிலோ ரூ. 30-க்கு விற்கப்பட்டது.
விலை மிகவும் குறைந்தாலும் வரத்து மிக அதிகமாக இருப்பதால் முழுவதும் விற்பனை ஆகவில்லை என்று மொத்த பூ வியாபாரி எஸ்.பி.எல். பாண்டியன் தெரிவித்தார்.
சாமந்தி பூ விற்பனையாவதைவிட அதிகமாக குவிந்ததால் பெருமளவில் குப்பையில் கொட்டப்படுகிறது. 5 முதல் 10 டன் வரை குப்பையில் கொட்டப்படுவதாக வியாபாரிகள் கூறினர்.
#TamilNews