

லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள ஐந்து பதவிகளில், தலைவர், துணைத்தலைவர், இணைச் செயலாளர் உள்ளிட்ட 4 பதவிகளை சமாஜ்வாடி கட்சியின் மாணவர் அணி வென்றுள்ளது.
பொதுச்செயலாளர் பதவியை மட்டும் பா.ஜ.க மாணவர் அணியான ஏ.பி.வி.பி வென்றது. கடந்த ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட 4 பதவிகளை ஏ.பி.வி.பி வென்ற நிலையில் இந்த ஆண்டு 1 பதவியை மட்டுமே வென்றுள்ளது.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட முக்கிய பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்களின் ஏ.பி.வி.பி பின்னடைவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.