சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குதலை கண்டித்து காங்கிரசார் உண்ணாவிரதம்

சேலம் உருக்காலையை தனியார்மயமாக்குதலை கண்டித்து இன்று கலெக்டர் அலுவலகம் அருகில் காங்கிரசார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் உருக்காலை (கோப்புப்படம்)
சேலம் உருக்காலை (கோப்புப்படம்)
Published on

சேலம் உருக்காலையை தனியார்மயமாக்குதலை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தொழிலாளர்களும் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உருக்காலையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் காங்கிரசார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக பெரிய அளவில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு தலைமை தாங்கினார். சேலம் மாநகர் மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ் வரவேற்று பேசினார். செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், வாழப்பாடி ராமசுகந்தன், முன்னாள் எம்.பி.தேவதாஸ், கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே. அர்த்தனாரி, மேற்கு மாவட்ட தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com