ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்தம்: சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கம் வென்றனர்

டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பயின்ஷிப் மல்யுத்தம் தொடரில் ரியோ புகழ் சாக்‌ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்தம்: சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கம் வென்றனர்
Published on

ரியோ ஒலிம்பிக்கில் 58 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் வெண்கல பதக்கம் வென்ற இந்தியாவின் சாக்‌ஷி மாலிக், இந்தியாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த தொடரில் கலந்து கொண்டார். ரியோ ஒலிம்பிக் தொடருக்குப்பின் அவர் பங்கேற்கும் முதல் தொடர் இதுவாகும். உடல் எடை 58 கிலோவை விட அதிகரித்ததால், 60 கிலோ எடைப்பிரிவில் சாக்‌ஷி மாலிக் பங்கேற்றார்.

காலிறுதி, அரையிறுதியைக் கடந்து முன்னேறிய சாக்‌ஷி மாலிக், இறுதிப் போட்டியில், ரியோ ஒலிம்பிக்கில் 63 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற ஜப்பான் வீராங்கனை ரிசாகோ கவாய்-ஐ எதிர்கொண்டார்.

பலம் வாய்ந்த ஜப்பான வீராங்கனைக்கு எதிராக சாக்‌ஷி மாலிக்கால் ஈடுகொடுக்க முடியவில்லை. 2 நிமிடம் 44 நொடிகளே நீடித்த இந்த போட்டியில் 10-0 என ஜப்பான் வீராங்கனை வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றார். தோல்வியடைந்த சாக்‌ஷி மாலிக் வெள்ளி பதக்கம் வென்றார்.

மற்றொரு வீராங்கனை வினேஷ் போகத் 55 கிலோ எடைப்பிரிவில் ஜப்பான் வீராங்கனையிடம் 4-8 என வீழ்ந்து வெள்ளி பதக்கம் வென்றார்.

முன்னதாக, 48 கிலோ எடைப்பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் ரிது போகத், சீனாவின் யனான் சன்னை எதிர்கொள்வதாக இருந்தது. ஆனால், அவர் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால், ரிது போகத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அவருக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com