சபரிமலை கோவில் பெயர் மாற்றம் ரத்து - தேவசம்போர்டு முடிவு

சபரிமலை கோவிலின் பெயரை ‘ஸ்ரீ அய்யப்ப சுவாமி கோவில்’ என மாற்று முடிவை ரத்து செய்ய தேவசம்போர்டு முடிவு செய்து உள்ளது. #Sabarimala #TDB
சபரிமலை கோவில் பெயர் மாற்றம் ரத்து - தேவசம்போர்டு முடிவு
Published on

சபரிமலை:

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலை திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வகித்து வருகிறது. இந்த கோவிலின் முழுப்பெயர் ‘சபரிமலை தர்மசாஸ்தா கோவில்’ ஆகும். இந்த கோவிலின் பெயரை ‘ஸ்ரீ அய்யப்ப சுவாமி கோவில்’ என மாற்றுவது என கடந்த சில மாதங்களுக்கு முன் தேவசம்போர்டு முடிவு செய்தது.

இது தொடர்பாக சில விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது இந்த பெயர் மாற்ற முடிவை ரத்து செய்ய தேவசம்போர்டு முடிவு செய்து உள்ளது. இது தொடர்பாக தேவசம்போர்டு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என அதன் தலைவர் பத்மகுமார் தெரிவித்து உள்ளார்.

முன்னதாக சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தேவசம்போர்டு சார்பில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் தேவசம்போர்டு முன்னாள் தலைவரான பிரேயர் கோபாலகிருஷ்ணன், கோவிலின் பெயரை மாற்றி அறிவித்து இருந்தார்.

மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட பிரேயர் கோபாலகிருஷ்ணனின் இந்த நடவடிக்கை தற்போதைய இடதுசாரிகளின் அரசால் கடும் விமர்சனத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. #Sabarimala #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com