

சென்னை:
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துகளை பேஸ்புக்கில் பகிர்ந்ததற்காக, நடிகரும், பா.ஜ.கவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உட்பட 4 பிரிவுகளில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், இன்று தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என கோரி சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். #SVeShekher #BJP #TamilNews