மிதக்கும் அணு மின் நிலையம் - ரஷியா உருவாக்கி சாதனை

ரஷியாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பரேசன், உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை (‘அகடமிக் லோமோனோசோவ்’ என்ற பெயரிலான கப்பல்) உருவாக்கி சாதனை படைத்துள்ளது. #Russia #nuclearplant
மிதக்கும் அணு மின் நிலையம் - ரஷியா உருவாக்கி சாதனை
Published on

மாஸ்கோ:

ரஷியாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பரேசன், உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை (‘அகடமிக் லோமோனோசோவ்’ என்ற பெயரிலான கப்பல்) உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அலெக்ஸி லிக்காசெவ் கூறும்போது, “உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தின் அணு உலையினுடைய செயல்பாட்டு சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். 10 சதவீத திறனுடன் இந்த அணு உலை தொடங்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டபடி ரஷியாவின் பெவெக் நகரத்தை அடுத்த இலையுதிர் காலத்திற்குள் சென்று அடைந்து உற்பத்தியை தொடங்கும். மிகவும் தொலைதூரத்தில் உள்ள பின்தங்கிய பகுதிகளுக்கு மின்சார வினியோகம் செய்வதில் இந்த அணு உலை முக்கிய பங்கு வகிக்கும்” என்று கூறினார்.

மேலும், “இந்த புதிய அணு உலை, ரஷிய ஆர்க்டிக் பகுதிகளுக்கு மட்டுமல்லாமல், உலகில் உள்ள எண்ணற்ற நாடுகளுக்கு நல்ல தீர்வாக அமையும். இந்த திட்டம் வெற்றி பெற்றிருப்பதையடுத்து சிறிய அணு உலைகளுக்கான தேவை உலகம் முழுவதும் வெகுவாக அதிகரிக்கும். உலகின் அணு உலை தொழில் நுட்ப சந்தையில் ரஷியா முதலிடத்தில் இருக்கும்” எனவும் அவர் தெரிவித்தார்.#Russia #nuclearplant

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com