ரஷியாவின் துணை பிரதமராக நிதி மந்திரி நியமனம்

ரஷியாவின் நிதி மந்திரி அன்ட்டன் சிலுவனாவ் என்பவரை புதிய அரசின் துணை பிரதமராக நியமித்து பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ் உத்தரவிட்டுள்ளார்.
ரஷியாவின் துணை பிரதமராக நிதி மந்திரி நியமனம்
Published on

மாஸ்கோ:

ரஷியா அதிபர் பதவிக்கு நடந்த தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதில் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களை, அதிக வாக்கு வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி விளாடிமிர் புதின்  வெற்றி பெற்றார். சுமார் 70 சதவிகித வாக்குகளை அவர் பெற்றிருந்தார். இந்நிலையில், அவர் முறைப்படி இன்று அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்துவரும் தனது தீவிர விசுவாசி டிமிட்ரி மெட்வடேவ்-ஐ அப்பதவியில் மீண்டும் நியமனம் செய்து நான்காவது முறையாக இன்று அதிபராக பதவியேற்ற புதின் உத்தரவிட்டார்.

இந்நிலையில், தனது மந்திரிசபையில் நிதி மந்திரியாக பதவி வகித்த அன்ட்டன் சிலுவனாவ் என்பவரை புதிய அரசின் துணை பிரதமராக நியமித்து பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ் உத்தரவிட்டுள்ளார். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com