114 அடி உயர இயேசு சிலை அமைக்க எதிர்ப்பு- இந்து அமைப்புகள் போராட்டம்

கர்நாடக மாநிலம் கனகபுரா பகுதியில் 114 அடி உயர இயேசு சிலை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து அமைப்புகள் போராட்டம் நடத்திய காட்சி
இந்து அமைப்புகள் போராட்டம் நடத்திய காட்சி
Published on

பெங்களூரு: 

கர்நாடக மாநிலம் கனகபுரா தாலுகாவில் உள்ள கபாலிபேட்டா பகுதியில் 114 அடி உயர பிரமாண்ட இயேசு கிறிஸ்துவின் சிலை அமைக்கப்படுகிறது. இதற்காக, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமார் நிலம் வழங்கி உள்ளார். இயேசு சிலை அமைப்பதற்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், இயேசு சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்.எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிஷத் மற்றும் இந்து ஜகரான் வேதிகே ஆகிய அமைப்புகள் இன்று கனகபுராவில் போராட்டம் நடத்தின. இதையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கனகபுராவில் அமைதியை சீர்குலைக்க பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் முயற்சி செய்வதாக டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும், கனகபுரா மக்கள் அமைதி காக்கவேண்டும், பிரச்சினையை தூண்டினாலும் பொறுமையை இழக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com