குன்னத்தூரில் ரூ.4 லட்சத்திற்கு கருப்பட்டி ஏலம்

குன்னத்தூரில் தென்னங்கருப்பட்டி கிலோ ரூ.102 வீதம் 4 லட்சத்து 8 ஆயிரத்திற்கு ஏலம் போனது.
கருப்பட்டி
கருப்பட்டி
Published on

குன்னத்தூர்:

குன்னத்தூரில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட கருப்பட்டி கூட்டுறவு விற்பனை சம்மேளனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தென்னை மற்றும் பனங்கருப்பட்டி ஏலம் நடைபெறுவது வழக்கம்.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு உற்பத்தியாளர்கள் 4 ஆயிரம் கிலோ தென்னங்கருப்பட்டியை கொண்டு வந்திருந்தார்கள். தென்னங்கருப்பட்டி கிலோ ரூ.102 வீதம் 4 லட்சத்து 8 ஆயிரத்திற்கு ஏலம் போனது. வரத்து இல்லாததால் பனங்கருப்பட்டி ஏலம் நடைபெறவில்லை.

இந்த தகவலை கூட்டுறவு கருப்பட்டி சம்மேளன மேலாண்மை இயக்குநர் மருதமுத்து, தலைவர் பொன்னுசாமி தெரிவித்தார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com