

சென்னை:
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் வழியாக வெளிநாட்டு பணம் கடத்தல் நடைபெறவுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அனைத்து பயணிகளின் உடமைகளையும் அதிகாரிகள் இன்று தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது, துபாய் செல்லும் விமானத்தில் பயணம் செய்யவிருந்த சையத் துராபுதீன் என்பவரது பெட்டியில் கட்டுக்காட்டாக வெளிநாட்டு பணம் இருந்ததை கண்டுபிடித்தனர்.
சவுதி நாட்டு ரியால், குவைத் நாட்டின் தினார் உள்பட சுமார் ஒரு கோடியே 34 லட்சம் மதிப்பிலான அந்த பணத்தை துபாய்க்கு கடத்த முயன்ற சையத் துராபுதீனை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிதியாண்டில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பெரிய தொகையிலான வெளிநாட்டு பணம் பிடிபட்டது இதுவே முதல்முறை என தெரியவந்துள்ளது. #tamilnews #chennaiairport #seized #foreigncurrencies