தமிழகத்தின் 2 ஆம் தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டும் - ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை

மதுரையை தமிழகத்தின் 2-ஆவது தலைநகரமாக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Published on

மதுரை:

மதுரையில் அதிமுக புறநகர் மேற்கு மாவட்டக்கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைகூட்டத்தில் பொதுச் செயலாளராக ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார். ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தின் 2 ஆம் தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டும். மதுரையை தமிழகத்தின் 2-வது தலைநகரமாக அறிவிக்ககோரி அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரையை தமிழகத்தின் 2 ஆம் தலைநகராக உருவாக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தென்மாவட்ட மக்களின் விருப்பமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com