பஜாஜ் டாமினர் விளம்பரம்: அசத்தலாக பதிலளித்த ராயல் என்ஃபீல்டு பிரியர்கள்

பஜாஜ் டாமினர் நிறுவனம் வெளியிட்ட புதிய விளம்பரம் ராயல் என்ஃபீல்டு பைக்களை வம்பிழுக்கும்படி உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து ராயல் என்ஃபீல்டு பிரியர்கள் பஜாஜ் நிறுவனத்திற்கு பதில் அளிக்கும் வீடியோவினை வெளியிட்டுள்ளனர்.
பஜாஜ் டாமினர் விளம்பரம்: அசத்தலாக பதிலளித்த ராயல் என்ஃபீல்டு பிரியர்கள்
Published on

புதுடெல்லி: 

ராயல் என்ஃபீல்டு பைக்களை வம்பிழுக்கும் வகையில் வீடியோ விளம்பரம் ஒன்றை பஜாஜ் சமீபத்தில் வெளியிட்டது. இந்த வீடியோவில் ராயல் என்ஃபீல்டு பயன்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களை நகைக்கும் படி பஜாஜ் வீடியோ அமைந்தது. 

ராயல் என்ஃபீல்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்த பஜாஜ் விளம்பரத்திற்கு ராயல் என்ஃபீல்டு சார்பில் எவ்வித பதிலும் இல்லை. 

எனினும் ராயல் என்ஃபீல்டு வாடிக்கையாளர்கள் சார்பில் பஜாஜ் நிறுவனத்தின் விளம்பரத்திற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. யூடியூப் தளத்தில் மூவிஸ் பிக்ஸ் எனும் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புதிய ராயல் என்ஃபீல்டு வீடியோ 'ரைட் லைக் எ கிங்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு வாகனத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து பைக்களின் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த காலாண்டில் அதிகபட்ச விற்பனையை பெற்றுள்ளது. தற்சமயம் 750சிசி இன்ஜின் கொண்ட மாடலை தயாரித்து வரும் ராயல் என்ஃபீல்டு தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்தில் வெளியான ஸ்பை புகைப்படங்களில் 750சிசி ராயல் என்ஃபீல்டு இன்ஜின் கொண்ட பைக் இரண்டு மாடல்களில் வெளியாகும் என தெரியவந்துள்ளது. இத்துடன் BS IV ரக இன்ஜின் கொண்ட ஹிமாலயன் மாடலினை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்துள்ளது. இதுவரை ஹிமாலயன் BS IV மாடல் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. 

தற்சமயம் முன்பதிவு துவங்கியுள்ள நிலையில் செப்டம்பர் மாத வாக்கில் இந்த மாடல் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் 350சிசி - 500சிசி பிரிவில் ராயல் என்ஃபீல்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மாடல்கள் பஜாஜ் பல்சர் மாடலை விட அதிக விற்பனையை கடந்துள்ளது.

புதிய ராயல் என்ஃபீல்டு வீடியோவினை கீழே காணலாம்..,

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com