பிரிட்டன் அரச குடும்பத்தில் புதிதாக இணைந்த குட்டி இளவரசருக்கு குவியும் வாழ்த்துக்கள்

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் - கேத் தம்பதிக்கு நேற்று பிறந்த ஆண் குழந்தைக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். #RoyalBaby
பிரிட்டன் அரச குடும்பத்தில் புதிதாக இணைந்த குட்டி இளவரசருக்கு குவியும் வாழ்த்துக்கள்
Published on

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதிக்கு ஏற்னவே ஜார்ஜ் என்ற மகனும், சார்லட் என்ற மகளும் உள்ளனர். மூன்றாவது முறையாக கர்பமாக இருந்த கேத் மிடில்டன் பிரசவத்திற்காக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உள்ளூர் நேரப்படி சுமார் 11 மணியளவில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

மருத்துவமனைக்கு வெளியே சர்வதேச ஊடகங்கள் குவிந்திருந்த நிலையில், வில்லியம் - கேத் தம்பதி புதிய குட்டி இளவரசருடன் வெளியே வந்து கை அசைத்தனர். இதனை அடுத்து, சில மணி நேரங்களுக்கு பின்னர் அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.

மருத்துவமனைக்கு வெளியே வில்லியம் - கேத் தம்பதி

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com