

புகழைத் தேடிக்கொடுத்த அணிக்கெதிராக ரொனால்டோ களம் இறங்கியதால் இந்த போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக சொந்த மைதானத்தில் விளையாடியதால் யுவான்டஸ் வீரர்கள் கூடுதல் பலத்துடன் விளையாடினார்கள்.
ஆனாலும் முதல் பாதி நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் யுவான்டஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் இருக்கும் வரை மான்செஸ்டர் யுனைடெட் பதில் கோல் அடிக்கவில்லை. இதனால் யுவான்டஸ் வெற்றிபெறும் என எதிர்பார்க்கபட்டது.
86-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஜுயன் மட்டா கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற்றது. 89-வது நிமிடத்தில் யுவான்டஸ் வீரர் அலெக்ஸ் சான்ட்ரோ ஓன் கோல் அடிக்க பரபரப்பான கட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 2-1 என வெற்றி பெற்றது.