வெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்

நியூசிலாந்து சென்று விளையாட இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் வெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு சேர்க்கப்பட்டுள்ளார்.
பிராவோ, ரொமாரியோ
பிராவோ, ரொமாரியோ
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ. இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். டெல்லி அணிக்கு எதிராக விளையாடும்போது காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்து சென்று டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com