

இந்த தொடர் வருகிற 23-ந்தேதி முதல் ஜூலை 9-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பிடித்துள்ள ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இளம் வீரர் ரிஷப் பந்த் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. விராட் கோலி (கேப்டன்), 2. தவான், 3. ரிஷப் பந்த், 4. ரகானே, 5. டோனி, 6. யுவராஜ் சிங், 7. கேதர் ஜாதவ், 8. ஹர்திக் பாண்டியா, 9. அஸ்வின், 10. ஜடேஜா, 11. மொகமது ஷமி, 12. உமேஷ் யாதவ், 13. புவனேஸ்வர் குமார், 14. குல்தீப் யாதவ், 15. தினேஷ் கார்த்திக்.