

சர்வதேச டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா 3 இடங்கள் சறுக்கி 21-வது இடம் பிடித்துள்ளார்.
பார்சிலோனா ஓபன் போட்டியில் முதல் சுற்றில் தோல்வி கண்டதால் ரோகன் போபண்ணா இந்த பின்னடவை சந்தித்துள்ளார். சீனியர் இந்திய வீரர் லியாண்டர் பெயஸ் ஒரு இடம் சரிவு கண்டு 50-வது இடம் பெற்றுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் 216-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.
பிரானேஷ் குணேஸ்வரன் 269-வது இடத்தில் நீடிக்கிறார். யுகி பாம்ப்ரி 10 இடங்கள் ஏற்றம் கண்டு 273-வது இடம் பெற்றுள்ளார். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா 7-வது இடத்தில் தொடருகிறார்.