மருதுகணேசை ஆதரித்து துரைமுருகன் பிரசாரம்

ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
மருதுகணேசை ஆதரித்து துரைமுருகன் பிரசாரம்
Published on

ராயபுரம்:

ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

வேட்பாளர் மருது கணேசை ஆதரித்து வட சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியின் முதன்மை செயலாளரும் சட்டசபை எதிர்கட்சி துணை தலைவருமான துரை முருகன் இன்று நேதாஜி நகர், மீனாம்பாள் நகர், துர்கா தேவி நகர், நேருநகர், குமரன் நகர், சிவாஜி நகர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். தி.மு.க. ஆட்சியில் ஆர்.கே.நகர் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட எண்ணற்ற திட்டங்கள், அடிப்படை வசதி உள்ளிட்டவற்றை எடுத்து கூறி மண்ணின் மைந்தனான மருதுகணேசுக்கு உதய சூரியனுக்கு வாக்களியுங்கள். உங்கள் வீட்டு பிள்ளையான மருதுகணேஷ் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார். அரசின் திட்டங்களை தொகுதி மக்களுக்கு உடனுக்குடன் பெற்று தருவார் என்று கூறி ஆதரவு திரட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com