பணப்பரிமாற்ற மோசடி வழக்கு - மிசா பாரதி டெல்லி கோர்ட்டில் ஆஜர்

பணப்பரிமாற்ற மோசடி வழக்கு தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவரான மிசா பாரதியும், அவரது கணவரும் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் இன்று ஆஜராகினர். #Misabharti
பணப்பரிமாற்ற மோசடி வழக்கு - மிசா பாரதி டெல்லி கோர்ட்டில் ஆஜர்
Published on

புதுடெல்லி:

ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி. இவர் அந்த கட்சி சார்பில் பாராளுமன்ற எம்.பி.யாக இருந்து வருகிறார்.

மிசா பாரதியும் அவரது கணவர் சைலேஷ்குமாரும் ஏராளமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் பண பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மிசாபாரதி ரூ.8000 கோடி அளவுக்கு பண பரிமாற்றம் மோசடி செய்து இருப்பது உறுதியானது.

இதையடுத்து பல கட்ட விசாரணைகள் நடந்தது. இந்த வழக்கில் மிசாபாரதி மீதும், அவர் கணவர் மீதும் குற்றப் பத்திரிகை பதிவு செய்யப்பட்டது. அமலாக்கத்துறை மிசாபாரதி மற்றும் அவரது கணவர் பெயரில் உள்ள சொத்துகளை முடக்கி கையகப்படுத்தியது. இதுதொடர்பான வழக்கில் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் அவர்களை ஆஜராகுமாறு அமலாக்க துறை ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது.

இந்நிலையில், பணப்பரிமாற்ற மோசடி வழக்கு தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவரான மிசா பாரதியும், அவரது கணவரும் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் இன்று ஆஜராகினர். 

அப்போது விசாரணை நடத்திய நீதிபதிகள், பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என அமலாக்க துறையிடம் வலியுறுத்தியது. மேலும், இந்த வழக்கை மே 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

#Misabharti #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com