மூன்றாம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு- தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

மூன்றாம் பாலினத்தவருக்கு அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு கோரிய வழக்கில் பதிலளிக்கும்படி தமிழக அரசுகு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #ReservationForThirdGender
மூன்றாம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு-  தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
Published on

சென்னை:

சென்னையைச் சேர்ந்த திருநங்கை சுதா என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், அரசுப் பணிகளில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ், இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடவேண்டும் என கூறியிருந்தார்.

அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவிற்கு டிசம்பர் 17ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது. #ReservationForThirdGender

X

Maalai Malar
www.maalaimalar.com