குளச்சலில் இன்று வள்ளம் கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த மீனவர் மீட்பு

நடுக்கடலில் வள்ளம் கவிழ்ந்து தத்தளித்துக் கொண்டிருந்த மீனவரை அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீட்டனர்.
குளச்சலில் இன்று வள்ளம் கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த மீனவர் மீட்பு
Published on

குளச்சல்:

குளச்சல் துறைமுக தெருவைச் சேர்ந்தவர் பிராங்கிளின் (வயது 48). மீனவர். இவர் இன்று அதிகாலை தனக்கு சொந்தமான பைபர் வள்ளத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென இவரது வள்ளம் பாறையில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. 

இதில் வள்ளத்தில் இருந்த பிராங்கிளின் கடலில் மூழ்கி தத்தளித்தார். அப்போது அந்த வழியாக முட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் நடுக்கடலில் தத்தளித்த பிராங்கிளினை கண்டதும் அருகில் சென்று அவரை மீட்டனர். 

பின்னர் அவரை முட்டம் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர். இதுபற்றிய தகவல் பிராங்கிளின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உயிருடன் மீட்கப்பட்டதை அறிந்து உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com