

பெங்களூரு:
கொரோனா வைரஸ் தாக்கியதால் கர்நாடக மாநிலம் கலபுரகியை சேர்ந்த 76 வயது முதியவர் இறந்தார். இதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பீதி அதிக அளவில் பரவி வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் குளிர் பானங்கள் அருந்துவதையும், ஐஸ்கிரீம், பானி பூரி சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று குடகு மாவட்ட கலெக்டர் அனிஷ்கண்மணிஜாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடகு மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அதிகமாக இருப்பதால் அங்கு வந்துள்ள வெளி மாநில சுற்றுலா பயணிகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டு உள்ளார்.
கொரோனா வைரஸ் பீதியால் சுற்றுலா துறைக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று கர்நாடக சுற்றுலா மந்திரி சி.டி. ரவி கூறி உள்ளார்.
கொரோனா வைரசை தடுக்க தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு கே.எஸ்.ஆர். ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனை கருவி மூலம் செய்யப்பட்டு வருகிறது.
பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் முககவசம் அணிந்தபடி வந்து செல்கிறார்கள்.