கமல் வீடு முன்பு இருந்த பேனர் அகற்றம்- போலீஸ் திடீர் நடவடிக்கை

நடிகர் கமல் வீடு முன்பு இருந்த பேனரை போலீசார் அகற்றியதால் கமல் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
கமல் வீடு முன்பு இருந்த பேனர் அகற்றம்- போலீஸ் திடீர் நடவடிக்கை
Published on

சென்னை:

நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந்தேதி அரசியல் கட்சி தொடங்குகிறார். அன்றே ‘நாளை நமதே’ என்ற பெயரில் அரசியல் சுற்றுப்பயணத்தையும் தொடங்க உள்ளார்.

அவரது சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. அவர் என்னென்ன நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்ற விவரம் அதில் இடம்பெற்றுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீட்டு முன்பு அவரது சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல் அடங்கிய டிஜிட்டல் பேனர் இன்று காலை வைக்கப்பட்டது. அதில் கமல்ஹாசன் படமும் இடம்பெற்றிருந்தது. மத்திய சென்னை மாவட்ட கமல் ரசிகர் மன்றத்தினர் இந்த பேனரை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் ஆழ்வார்பேட்டை போலீசார் பேனர் இருந்த இடத்திற்கு வந்தனர். அங்கிருந்த ரசிகர்களிடம் இங்கு பேனர் வைக்க அனுமதி வாங்கவில்லை. எனவே பேனரை அகற்றுங்கள் என்று கூறினார்கள். இதனால் ரசிகர்கள் உடனடியாக பேனரை அகற்றினார்கள்.

போலீசாரின் இந்த நடவடிக்கையால் கமல் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com