ஜியோ மும்மடங்கு கேஷ்பேக் சலுகை: டிசம்பர் வரை நீட்டிப்பு

ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த மும்மடங்கு கேஷ்பேக் சலுகைகள் நவம்பர் 25-ம் தேதியுடன் நிறைவுற இருந்ததை தொடர்ந்து டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜியோ மும்மடங்கு கேஷ்பேக் சலுகை: டிசம்பர் வரை நீட்டிப்பு
Published on

ரிலையன்ஸ் ஜியோவின் மும்மடங்கு கேஷ்பேக் சலுகையின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ.399 அல்லது அதற்கும் அதிகமான தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்யும் போது ரூ.400 மதிப்பிலான வவுச்சர்களையும், ஆன்லைனல் தளங்களில் பயன்படுத்தக்கூடிய ரூ.1899 மதிப்பிலான சலுகைகளை வழங்குகிறது.

இந்த சலுகையில் பயன்பெற நவம்பர் 25-ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை ரிலையன்ஸ் ஜியோ சலுகையில் இதுவரை ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்கள் டிசம்பர் 15-ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்து மும்மடங்கு கேஷ்பேக் பெற முடியும்.

அமேசான் பே, பேடிஎம், போன்பெ மற்றும் மொபிகுவிக் போன்ற சேவைகளில் பயன்படுத்த கேஷ்பேக் வழங்குகிறது. இத்துடன் புதிய மற்றும் பழைய ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 கேஷ்பேக் வழங்கப்படுவதோடு, புதிய போன்பெ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது. பேடிஎம் மற்றும் மொபிகுவிக் சலுகைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

ஜியோ கேஷ்பேக் முழு விவரங்கள்:

- ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களில் ரூ.399 அல்லது அதற்கும் அதிகமான தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்யும் போது ரூ 400 (ரூ.50X8) கேஷ்பேக் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது. இந்த கேஷ்பேக் வவுச்சர்கள் மைஜியோ மூலம் உடனடியாக வழங்கப்படுகிறது.

- அமேசான்பே, மொபிகுவிக், பேடிஎம் மற்றும் போன்பெ உள்ளிட்ட டிஜிட்டல் வாலெட் கொண்டு பணம் செலுத்தும் போது ஒவ்வொரு ரீசார்ஜ் செய்யும் போதும் ரூ.300 வரை கேஷ்பேக் பெற முடியும்.

- ஜியோ சிறப்பு வவுச்சர்கள் - AJIO, யாத்ரா.காம் மற்றும் ரிலையன்ஸ் டிரென்ட்ஸ் உள்ளிட்ட தளங்களில் பயன்படுத்த வழங்கப்படுகிறது. AJIO தளத்தில் குறைந்த பட்சம் ரூ.1,500க்கு பொருட்களை வாங்கும் போது ரூ.399 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

- இதேபோல் யாத்ரா.காம் தளத்தில் அனைத்து உள்நாட்டு விமானங்களிலும் ரவுண்டு டிரிப் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு ரூ.1000 தள்ளுபடியும், ஒருவழி பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ரூ.500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com